இருளர், குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகள்
04.11.2021 15:43:26
தமிழ்நாடு முழுவதும் இரண்டு வார காலத்துக்கு இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இருளர், நரிக்குறவ மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து, பரிசுகள் கொடுத்து, அவர்களை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.