ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு விஜயம்!

13.01.2024 17:50:37

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளார்.

 

அதன்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை அங்கு செல்லும் அவர் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் கடந்த வருடம் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உலகப் பொருளாதார மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்பதுடன் இம்முறை ஜனாதிபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.