தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றால் பிரித்தானியாவிற்கு நெருக்கடி

01.07.2024 07:45:16

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மீள முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இன்னும் மூன்று நாட்களில் பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வரி அதிகரிக்கும் எனவும், நமது வரிகள், எல்லைகள் மற்றும் நமது பாதுகாப்பை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் வலியுத்தியுள்ளார்.

அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்வோர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பிரித்தானியத் தெருக்களில் அவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படும் எனவும் பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

லேபர் கட்சி ஆட்சிக்கு வருமாயின், முதல் 100 நாட்களில் பிரித்தானியாவை மீளமுடியாதொரு நெருக்கடிக்குள் தள்ளுவார்கள் என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாலும், வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு படு தோல்வியை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ள நிலையில், ரிஷி சுனக் லேபர் கட்சியை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.