
லத்தி எனக்கு ஸ்பெஷலானது - விஷால்
06.04.2022 18:42:22
வீரமே வாகை சூடும் படத்திற்கு பின் விஷால் நடித்து வரும் படம் ‛லத்தி'. சமர் படத்திற்கு பின் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வினோத் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதில் போலீஸ் உடையில் பின்னால் திரும்பியபடி உடலில் காயங்கள், கையில் லத்தி உடன் விஷால் போஸ் கொடுத்துள்ளார்.
லத்தி பற்றி விஷால் கூறுகையில் ‛‛நான் பல படங்களில் ஆக்ஷன் காட்சிக்காக பல ஆக்ஷன் இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளேன். பீட்டர் ஹெய்ன் உடன் இந்த படத்தில் பணியாற்றியது என் வாழ்நாள் ஸ்பெஷல்'' என்கிறார்.