
அபி டெய்லர் சீரியலில் என்ட்ரியாகும் சாந்தினி
19.12.2021 13:00:02
விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியவர் சாந்தினி பிரகாஷ். தொடர்ந்து ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் நடிகையாக என்ட்ரி கொடுத்து சரவணன் மீனாட்சி, பிரியமானவள், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரேஷ்மா மற்றும் மதன் இணைந்து நடிக்கும் அபி டெய்லர் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரியாகவுள்ளார்.
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாந்தினி தமிழ் சினிமாவிலும், தில்லுக்கு துட்டு, ஓடி ஓடி உழைக்கனும், ஏமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.