மேயர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர்.

10.09.2026 14:51:00

பிரதமர் மேயர்களுக்கு அளிக்கும் அதிகாரம், ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கக் காரணமாக அமையும் என விருந்தோம்பல் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆன்டி பர்னாம் பிரதமரானதிலிருந்தே, மேயர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பில் தொடர்ந்து பேசிவருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து மேயர்கள் விருந்தோம்பல் துறைக்கு கணிசமான வரி விதிக்க இருப்பதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

   

அதாவது, இங்கிலாந்திலுள்ள ஹொட்டல்களில் தங்குவதற்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.

அதை, மேயர்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள். இவ்வளவுதான் வரி என ஒரு வரை முறையும் இல்லை.

ஆக, உதாரணமாக, ஒருவர் ஒரு நாள் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தங்குவதற்கு கூடுதலாக 5 சதவிகித வரி விதிக்கப்படுமானால், அதன் காரணமாக, ஹொட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என்கிறார்கள் விருந்தோம்பல் துறையினர்.

அப்படி, ஹொட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்தால், ஹொட்டல்களுக்கு வருவாய் குறையும். வருவாய் குறைந்தால், அதை ஈடு செய்ய பணியாளர்களை குறைக்கவேண்டிவரும்.

ஆக, கூடுதலாக விதிக்கப்படும் 5 சதவிகித வரியால், நாடு முழுவதும் 33,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.