நீட் தேர்வால் கல்வியின் தரம் குறைகிறதா?
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது மருத்துவ கல்வியின் தரத்தை பாதிக்குமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 70,000 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், பல இடங்கள் காலியாக இருப்பதை கருத்தில் கொண்டு, இந்திய மருத்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் இந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கையை எடுத்தது.
இதன்படி, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான 50 சதவீத தகுதி, 7 சதவீதமாக சரிந்தது. தகுதி மதிப்பெண் இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுவதால், எதிர்காலத்தில் சிகிச்சையின் தரம் மற்றும் மருத்துவர்களின் திறன் குறைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலியிடங்களை நிரப்புவதை விட கல்வியின் தரம் முக்கியமானது என்பதே இந்த வழக்கின் மையக்கருத்தாக உள்ளது.