இந்தியாவில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

08.07.2023 16:13:00

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள உக்ருல் மாவட்டம் அருகே 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக,  கடந்த செவ்வாய்க்கிழமை(04) அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங்கில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அதே நாளில்,  லடாக்கில் 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

கார்கிலுக்கு வடக்கே 401 கி.மீ தொலைவில் 150 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.