இலங்கையின்தற்போதைய நெருக்கடிக்கு ஐந்து மாதங்களில் தீர்வு

21.07.2022 07:53:19

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிடம் தெளிவான திட்டம் மற்றும் தெளிவான பாதை உள்ளதாகவும், அதனை பின்பற்றுவதன் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்வரும் 5 மாதங்களில் தீர்வு காண முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.