மொஸ்கோ தாக்குதல்

23.03.2024 09:00:38

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை  ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது.

டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸ்கோவில் உள்ள அமெரிக்கர்கள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும் குறிப்பாக இசைநிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என அமெரி;க்க இராஜாங்க திணைக்களம் இரண்டுவாரங்களிற்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்களை உன்னி;ப்பாக அவதானிப்பதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களம தெரிவித்திருந்தது.