
காலிஸ்தானி பிரிவினைவாதி மீது வழக்கு!
ரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த மாதம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி பிரிவினைவாதி கடந்த இந்திய சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, தேசியைக் கொடியை ஏற்றுவதை தடுக்க சீக்கிய வீரர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், ₹11 கோடி ரூபா பரிசுத் தொகையினையும் அறிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மையை பன்னுன் வெளிப்படையாக சவால் செய்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இந்த வழக்கைப் பதிவு செய்தது.
பன்னுன் தனது உரையில் இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கினார்.
பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய காலிஸ்தான் என்று அழைக்கப்படும் வரைபடத்தை அவர் வெளியிட்டார்.
இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல்களிலும், இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களிடையே அதிருப்தியைப் பரப்புவதிலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.