
தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் அடுத்த படம்?
14.10.2025 13:53:11
நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். அவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் மற்றும் ஹிந்தியில் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் அவர் இராவணன் ஆக நடிக்கிறார். |
இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் யாஷ் இருவரும் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தற்போது மிக பிரம்மாண்டமாக ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு பிறகு தான் யாஷ் உடன் அவர் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் pan India படமாக உருவாகிறதாம். |