பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!

07.06.2025 10:13:09

கனடாவின் ஓல்பர்ட்டாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

 

இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதற்றமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி எனவும் சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன் எனவும், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன் எனவும் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.