அட்லீ - சல்மான் கான் இணையும் பிரம்மாண்ட படம்!
24.11.2024 07:10:00
அட்லீ ஜவான் படம் மூலமாக பாலிவுட்டில் நுழைந்து இருக்கிறார். அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து அட்லீ சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க போகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக செய்து வருகிறார் அட்லீ. இது இரண்டு ஹீரோக்கள் பற்றிய கதை என்றும் இன்னொரு ஹீரோ ரோலுக்கு ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. |
இந்த படத்தின் கதை மறுஜென்மம் அடிப்படையிலானது எனவும், வரலாற்று காலத்தில் நடக்கும் பகுதிகளும் பிரம்மாண்டமாக படத்தில் இடம்பெறுகிறதாம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. |