பாரா ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றம்!

01.09.2021 16:47:23

ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா உள்ளிட்ட 3 பேர் போட்டியிட்ட பாரா ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர்ரைபிள் புரோன் கலப்பு துப்பாக்கி சுடுதலில் யாரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி 8வது நாளை எட்டியுள்ளது.

இன்று காலை 10 மீட்டர் ஏர்ரைபிள் புரோன் கலப்பு பிரிவு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர். இந்தியாவில் இருந்து ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா மற்றும் சித்தார்த் பாபு, தீபக் ஆகியவர்கள் களமிறங்கினர்.

ஆனால் யாருமே முதல் 8 இடங்களுக்குள் வர முடியவில்லை. 629.7 புள்ளிகளை குவித்த அவனி லெகாரா 27வது இடத்தையும், 625.5 புள்ளிகளுடன் சித்தார்த் பாபு 40வது இடத்தையும் பிடித்தனர். தீபக் 43ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இப்பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற 8 பேரில் மூவர் வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.