7 தங்கப்பதக்கங்களை பெற்ற மாணவி!

20.02.2026 15:21:24

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று (20) நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பமாகிய யாழ். பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இன்றைய அமர்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா ஏழு தங்கப் பதக்கங்கள் உட்படப் பணப்பரிசில்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.