அமரன் படத்தின் வசூல் விவரம்!
2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள் என பட்டியல் எடுத்தால், அதில் கண்டிப்பாக அமரன் படமும் இடம்பெறும். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, நாட்டிற்காக தனது உயிரை கொடுத்த, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். |
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, உலகநாயகன் கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷின் இசை, இப்படத்தை மேலும் ரசிகர்களின் மனதை தொட செய்தது. மூன்று நாட்களில் ரூ. 100 கோடி, பத்து நாட்களில் 200 கோடி என தொடர்ந்து சாதனை படைத்து வந்த அமரன் படம், 28 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை அமரன் திரைப்படம் உலகளவில் ரூ. 321 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 300 கோடியை கடந்தும், இன்னும் வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமரன் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |