கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல நீக்க வேண்டும்: ஜேர்மனி அதிபர் அங்கலா மேர்க்கல் !
ஜேர்மனியில் தற்போது மூன்றாவது கொவிட் தொற்றலையை தடுப்படுத்தற்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல நீக்க வேண்டும் என ஜேர்மனி அதிபர் அங்கலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஜேர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை. எனினும் மூன்றாம் அலையில் ஜேர்மனி உள்ளதால் ஊரடங்கை மெல்ல, மெல்ல நீக்க வேண்டும்.
பிரித்தானியாவிலிருந்து பரவும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுத் தன்மை கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என கூறினார்.
தற்போதைய கட்டுப்பாடுகளின் படி, பெரும்பாலான கடைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களான உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டிருக்கும். புதிய நடவடிக்கைகளில் சில பொது இடங்களில் அணிய வேண்டிய முகக்கவசங்கள் குறித்த கடுமையான விதிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் மீது அதிக பொறுப்பு ஆகியவை அடங்கும்.
சமீபத்திய நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் குறைந்து வருகின்றன மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் அழுத்தம் சற்று குறைந்துவிட்டாலும், பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டவை போன்ற தொற்று வகைகள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பரவக்கூடும் என்று வைராலஜிஸ்டுகள் கவலைப்படுகிறார்கள்.