யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பாரிய குண்டுகள் மீட்பு
17.09.2021 05:41:49
யாழ்ப்பாணம் கொடிகாமம் குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
ஆட்களற்ற காணியுடனான சிறிய குளத்துடன் உள்ள பற்றைக் காட்டில் குறித்த வெடி குண்டுகள் காணப்பட்டது.
பொதுமகன் ஒருவர் நேற்று கொடிகாமம் காவல் துறையினரிடம் இது தொடர்பில் தெரிவித்தமைக்கு அமைய குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டுகளில் ஒன்று 15 கிலோ மற்றையது 10 கிலோ நிறையைக் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.