உக்ரைன் நகரில் தாக்குதல் பலர் பலி!

04.02.2024 13:38:46

ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன், மேற்குலக நாடுகள் வழங்கி ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

தாக்குதல் நடந்த போது வெதுப்பகம் அமைந்துள்ள கட்டடத்தில் பல பொதுமக்கள் இருந்தனர் எனவும் ரஷ்யா மேலும் தெரிவித்துள்ளது.