மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் பிரேம் நசீர் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மலையாள திரை உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருப்பவர் மோகன்லால் என்பதும் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. குறிப்பாக கமல்ஹாசன் அவர் நடித்த ’உன்னை போல் ஒருவன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன்லால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘40 வருடங்களில் 400 படங்கள் என்ற சாதனையை செய்துள்ள நீங்கள் விரைவில் பிரேம்நசீர் நடித்த 500 படங்கள் என்ற சாதனையை முறியடிக்க வேண்டும் என்றும் அதற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மோகன்லால் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னும் சில தமிழ் படங்களில் நடிக்க அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.