விஜய்யின் அரசியல் இந்தியாவே திரும்பி பார்க்கும்.

09.02.2026 14:28:35

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய அவர், விஜய்யின் அசுர வேக அரசியல் வளர்ச்சியை கண்டு டெல்லி அதிகார மையமே கலக்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக, விஜய்க்கு தமிழகத்தில் தற்போது 42 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் துறந்துள்ளதாக பாராட்டிய செங்கோட்டையன், அவர் ஒருமுறை முதல்வரானால் வாழ்நாள் முழுவதும் அவரே அந்த பதவியில் நீடிப்பார் என உறுதிபட தெரிவித்தார். 

உலகெங்கிலும் உள்ள 3 லட்சம் தமிழர்கள் விஜய்க்காக வாக்களிக்க தாயகம் வரவுள்ளதாகவும் அவர் கூறினார். விஜய்யின் அரசியல் பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்றும், அது எதிர்க்கட்சிகளின் அரசியல் வியூகங்களைத் தகர்க்கும் என்றும் அவர் தனது உரையில் சூளுரைத்தார்.