ஹைட்ரஜன் ரயில்: கின்னஸ் சாதனை..!

29.03.2024 07:03:03

சுவிட்சர்லாந்து நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2 நாட்கள் பயணம் நிற்காமல் 2,803 கிமீ பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளதை அடுத்து அந்நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

சுவிட்சர்லாந்து நிறுவனமான ஸ்டாட்லர் என்ற நிறுவனம் சமீபத்தில்  ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை  வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.
 

இந்த ரயில் பல்வேறு சோதனைக்கு பின்  ஒரு முழு ஹைட்ரஜன் டேங் நிரப்பப்பட்டு 2,803 கிமீ வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளது.. இதுகுறித்து ஸ்டாட்லரின் துணைத் தலைவர் டாக்டர் அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறியதாவது:
‘இந்த கின்னஸ்  சாதனை எங்கள் நிறுவனத்தின் சிறந்த செயல்திறனை காட்டுகிறது என்றும்,  இது ஒரு மகத்தான சாதனை என்றும், இன்னொரு உலக சாதனையை படைத்ததில் நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.