காசா, லெபனான் மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!
காசா மற்றும் லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. காசா மற்றும் லெபனானை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் பல தனித்தனி ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. |
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா மற்றும் லெபனானில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரிகளின் தெரிவித்துள்ளன. இன்று காலை காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். AP ஊடக அதிகாரிகள் மத்திய காசாவின் ஜவேடாவில் 10 பேரின் சடலங்களையும், மகாசி அகதிகள் முகாமில் 11 பேர் சடலங்களையும் எண்ணியுள்ளனர். பாலஸ்தீன செய்தி நிறுவனமான WAFA வழங்கிய தகவலில், ஜபாலியாவின் அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதே சமயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் வடக்கே இஸ்ரேலிய ராக்கெட் கார் மீது பாய்ந்ததில் 2 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. |