ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்..

04.05.2022 09:32:26

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவரைப் போல அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காசர்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்களுக்கு ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.