முதலமைச்சருடன் ’செஸ்’ பிரக்ஞானந்தா ’செக்’.

08.06.2026 14:53:48

நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வாழ்த்து தெரிவித்து, உயரிய ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார்.

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற "நார்வே செஸ் 2026" தொடரில், முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இவரைப் பாராட்டும் வகையில், திங்கட்கிழமை(08) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, முதலமைச்சர் விஜய் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சதுரங்கப் பலகையில், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் சில நிமிடங்கள் செஸ் விளையாடி, அவரது திறமையைப் பாராட்டி மகிழ்ந்தார்.