ராஜபக்ஷ நிழல் அரசாங்கம்; சஜித் அதிரடி!

20.02.2023 00:13:11

போராட்டத்தின் மூலம் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் அபிமானத்துடனும் வாழ்ந்து வந்த குடிமக்கள் இருந்த நம் நாட்டில் ராஜபக்ஷர்களின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியினால் இந்த அபிமான தேசம் அழிந்ததாக சுட்டிக்காட்டினார்.

நண்பர் கூட்டம், முதலாளித்துவ ராஜபக்ஷ குடும்ப வாதம், ஊழல், இலஞ்சம் போன்றவற்றால் இந்நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். நாட்டை இவ்வளவு பாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ஷ குடும்பவாதமே எனவும், இதற்காக, 2005 இல் ராஜபக்ஷர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, நாட்டுக்கு தீர்வு என கூறிக்கொண்டிருக்கும் சிவப்பு தம்பிமார்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டை அழித்த ராஜபக்ஷர்களுக்கு அவர்கள் மகுடம் சூட்டினாலும் சஜித் பிரேமதாஸ ராஜபக்ஷர்களை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடவில்லை எனவும், தாம் எப்போதும் பொது மக்களுடனே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் மூலம் எமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள் பணம் அனைத்தும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு திருடர்களைப் பிடித்து வெளிப்படத்தன்மை வாய்ந்த அரச ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

போராட்டத்தின் மூலம் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.