ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து.
28.10.2026 15:19:14
ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
80 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மாட்ரிட்–செவில்லே வழித்தடத்தில் பயணித்த ரென்ஃபே (Renfe) மற்றும் இரியோ (Iryo) நிறுவனங்களின் ரயில்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.