சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்!

29.03.2024 14:08:38

”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மக்கள் ஆணையுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும். நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்.

இந்த நாட்டுமக்களின் அமோக ஆதரவுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர்தொடர்பாக எமது தனிப்பட்ட தீர்மானத்தினால் எதனையும் செய்யமுடியாது. மக்கள் அதனை தீர்மானிப்பர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்