’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.

18.06.2024 07:00:00

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் சற்றுமுன் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இதன்படி ’புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

’புஷ்பா 2’  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பா. ரஞ்சித் இயக்கத்தில்  விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.