பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முன்வந்துள்ள 22,000 மருத்துவர்கள் !

18.02.2021 10:38:37

பிரான்ஸ், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிராத நிலையில், அங்கு 22,000 மருத்துவர்கள் தாங்களாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்.

இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும், பக்க விளைவுகளின் அச்சத்தால் ஒவ்வொரு பிரிவிலும் சிலரிற்கு மட்டுமே ஊசிகள் போட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 70.000 அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் தனியார் மருத்துவர்களிற்காக, மருந்தகங்களிற்கு விநியோகம் செய்யப்படுகின்றது.

மருந்தகப் பணியாளர்கள் தாங்களும் கொரோனாத் தடுப்பூசிகள் போட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.