அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோய்காவுவண்டிகளுக்கு கட்டணமில்லை!

14.12.2021 05:11:45

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சகல நோய்காவுவண்டிகளிடம் (அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் தொடர்புள்ள) பயண கட்டணம் அறவிடாதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோய்காவுவண்டிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டது.

கொவிட் தொாற்று காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு  அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல நோய்காவுவண்டிகளிடம் கட்டணம் அறவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.