'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு
ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். குறிப்பாக நித்யா மேனனுக்கு இந்த படத்தில் ஜெயம் ரவியை விட கூடுதல் முக்கியத்துவம் என்பதால் அவரது பெயர் போஸ்டரில் முதலிடத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி அனைவர் கவனத்தையும் பெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீடு, டீசர், ட்ரைலர் வெளியாகும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.