ஜனாதிபதிக்கு எதிராக நாளை அமெரிக்காவில் ஆர்பாட்டம்

21.09.2021 06:57:10

ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா பொதுச் சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி நாளை புதன்கிழமை உரைநிகழ்த்தவுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டமும் அன்றைய தினத்தில் முற்பகல் 11 மணிக்கு ஐ.நா தலைமையகத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.

“GoBackGota” என்ற பெயரில் அணிதிரண்டு கூச்சல் எழுப்பி போராட்டத்தை நடத்த அங்கிருக்கின்ற நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் திட்டமிட்டிருப்பதாகவே தெரியவருகின்றது.