சல்மான்கான் படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

12.04.2024 00:28:00

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதனை அடுத்து சல்மான்கான் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு ’சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ’சிக்கந்தர்’ திரைப்படம் ரிலீஸ் என்ற தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் இந்த திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அனேகமாக இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.