டிசம்பரில் வெளியாகும் ஜெயம் ரவி படம்!

29.10.2022 16:22:14

டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டிசம்பரில் ஜெயம் ரவியின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் இந்த படம் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதேபோல் டிசம்பர் 14ஆம் தேதி சிம்புவின் ’பத்து தல’ படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் இந்த படமும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திபோட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில் தனுஷ், சிம்பு படங்கள் டிசம்பருக்கு ஒத்திபோடப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் டிசம்பரில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ’பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.