பிரபல நடிகையுடன் விஷால் திருமணமா?

28.10.2022 19:29:03

தமிழ் சினிமாவில் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வரும் நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து விட்டதாகவும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ’லத்தி’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

 

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அபிநயா நடித்து வரும் நிலையில் அபிநயாவுக்கும் விஷாலுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

 

இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் அளித்தபோது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிய நிலையில் நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பப்பட்டு வருகிறது என்றும் அது முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஷால் - அபிநயா திருமணம் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நடிகை அபிநயா சசிகுமாரின் ‘நாடோடிகள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன்’, ‘தனி ஒருவன்’, ‘ஷமிதாப்’, ‘விழித்திரு’, ‘சீதாராமன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஷாலுடன் அவர் ’பூஜை’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.