மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கிரேக்கத்தில் சுட்டுக் கொலை !
11.04.2021 10:56:38
மூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஏதென்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் குறித்த ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்திய அவரது காரணத்தினால் அவர் கொல்லப்பட்டாரா என ஊடக சுதந்திர அமைப்புகள் கேள்வியெழுப்பின,
இதேவேளை இந்த இழிவான, கோழைத்தனமான கொலைக்கு நீதி வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வன் டெர் லேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.