“சீமான் பேச்சில் குழப்பமும், பொய்யும்தான் இருக்கிறது”

31.12.2024 08:00:34

ஐ.பி.எஸ். அதிகாரியான வருண் குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகச் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று 30.12.2024) வருண் குமார் ஆஜரானர். அப்போது நீதிபதியிடம் அவர் 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு சீமானின் அறிக்கை, வீடியோ உள்ளிட்ட 9 ஆவணங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வழக்கு என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொடரவில்லை. தனிப்பட்ட முறையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக நான் தெரிவித்துவிட்டேன். கடந்த 2021ஆம் ஆண்டு திருவள்ளூரில் நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பொழுது நா.த.க.வைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் அவதூறான சில விசயங்களைப் பதிவு செய்தார். அதன் காரணமாகச் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. எனவே அப்போது அவரை கைது செய்தோம். அதிலிருந்தே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வழக்கிற்காக அவரை கைது செய்ய நேர்ந்தது.

அப்போது அக்கட்சியை சேர்ந்தவர்கள் என்னை அவதூறாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள். என்னுடைய குடும்பத்தை குறித்தும் அவதூறு கருத்தை பரப்பினார்கள். என்னுடைய மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே மற்றும் என் குழந்தைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மார்பிங் செய்து சில புகைப்படங்களை பகிர்ந்தார்கள். அந்த புகைப்படங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்களில் நீக்கப்படாமல் உள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய சீமான் என்னை அவதூறாக பல இடங்களில் பேசினார். அதிலும் குறிப்பாக சாதியை குறிப்பிட்டும் பேசினார். மேலும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் என் குடும்பத்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தார்கள். அதனை கூட சீமான் கண்டிக்கவில்லை. அதேசமயம் அவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என மட்டும் சீமான் பேசி வந்தார். ஆனால் அவ்வாறு பதிவிட்டவர்களை கைது செய்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் அவர்களை பிணையில் எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக எழுதி உள்ளார்கள் என கூறினால் அதனைக் கண்டிக்காமல் எங்களையும் குறித்து அவ்வாறு பலர் எழுதியுள்ளார்கள் என சீமான் பேசி வந்தார். அதற்கு அவர் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவருக்கு சுயமரியாதை இல்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது. எங்கள் குடும்பத்தினர் குறித்து பேசியதால் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். தற்போது சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்த கட்டமாக அவர் மீது சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன். அப்போது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை அவதூறாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள். என்னுடைய குடும்பத்தைக் குறித்தும் அவதூறு கருத்தைப் பரப்பினார்கள். என்னுடைய மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே மற்றும் என் குழந்தைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மார்பிங் செய்து சில புகைப்படங்களைப் பகிர்ந்தார்கள்.

அந்த புகைப்படங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்களில் நீக்கப்படாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய சீமான் என்னை அவதூறாகப் பல இடங்களில் பேசினார். அதிலும் குறிப்பாகச் சாதியைக் குறிப்பிட்டும் பேசினார். மேலும் அவரது கட்சியினர் சமூக வலைத்தளங்களில் என் குடும்பத்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தார்கள். அதனைக் கூட சீமான் கண்டிக்கவில்லை. அதேசமயம் அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என மட்டும் சீமான் பேசி வந்தார். ஆனால் அவ்வாறு பதிவிட்டவர்களைக் கைது செய்த போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அவர்களைப் பிணையில் எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக எழுதி உள்ளார்கள் எனக் கூறினால் அதனைக் கண்டிக்காமல் எங்களையும் குறித்து அவ்வாறு பலர் எழுதியுள்ளார்கள் எனச் சீமான் பேசி வந்தார். அதற்கு அவர் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவருக்குச் சுயமரியாதை இல்லை. எனக்குச் சுயமரியாதை இருக்கிறது. எங்கள் குடும்பத்தினர் குறித்துப் பேசியதால் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். தற்போது சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்த கட்டமாக அவர் மீது சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன். வீட்டில் புலி வெளியே எலி என்பார்கள். அதுபோல சீமான் மைக் முன்பு பேசினால் புலி போல் பேசுவார். பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் அதைச் செய்யவில்லை.

அவர் முறைப்படி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு அளித்தால் அதன் பிறகு எனது நிலைப்பாடு குறித்துத் தெரிவிப்பேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மிகவும் கஷ்டப்பட்டு இந்த பணியில் சேர்ந்துள்ளேன். இதற்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளேன். நான் அணிந்திருக்கும் காக்கி உடையைக் கழட்டி வைத்து விட்டு வா பார்ப்போம் எனச் சீமான் சொல்கிறார். நான் ஓய்வு பெற்றாலும் அவர் மீதான வழக்கைத் தொடர்ந்து நடத்துவேன். ஏற்கனவே காக்கி சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு வா எனப் பேசியவர் தற்போது எனக்கும் வருண் குமாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை எனப் பேசுகிறார். சீமானின் பேச்சில் குழப்பமும் பொய்யும்தான் எப்பொழுதும் இருக்கிறது” எனத் தெரிவித்தார். முன்னதாக திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி இருந்த வருண் குமார் ஐ.பி.எஸ் பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி இருந்த வருண் குமாரின் மனைவி வந்திதா பாண்டேவும், பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.