
தீபிகாவுக்கு ஆந்திர உணவு தந்து அசத்திய பிரபாஸ்
தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் - இந்தியா நடிகராக மாறிவிட்டார். அவர் தற்போது 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் அதன் கதாநாயகியான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தால் பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கு சிறப்பான உணவு அளித்து விருந்தோம்பல் செய்வார். இதற்கு முன்பு 'சலார்' படத்தின் போதும் பிரபாஸ் அளித்த உணவு பற்றி ஸ்ருதிஹாசன் பதிவிட்டிருந்தார்.
இப்போது தீபிகா படுகோனே அது குறித்து பதிவிட்டுள்ளார். ஆந்திரா, ஐதராபாத் உணவு வகைகளுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து “உங்களுக்குத் தெரிந்தால் உங்களுக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 'பிராஜக்ட் கே' என அழைக்கப்படும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.