ஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி?

02.01.2021 09:53:47

ஒக்ஸ்போர்ட்டின் அஸ்டிராஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு அஸ்டிராஜெனேகாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது என இருவர் உறுதி செய்துள்ளனர் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக உலகில் கொரோனாவினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவதாக உள்ள இந்தியாவில் அஸ்டிரஜெனேகாவை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாஅனேகமாக புதன்கிழமை இந்த மருந்தினை பயன்படுத்த ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.