தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை

02.12.2021 06:17:23

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 நாடுகளில் இருந்து வந்த 477 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி ஆகி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.