“பெரும்பான்மை அவசியம் இல்லை”
அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
தமது கட்சி அங்கத்துவம் வகிப்பதாலேயே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனக் கூறியுள்ளார்.
நாட்டின் நீதித்துறையில் அரசாங்கம் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும் நீதித்துறையில் தலையிடப்போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் தெளிவாக கூறியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.