
சங்கராந்தி போட்டியில் இருந்து விலகிய மகேஷ்பாபு
04.11.2021 15:45:21
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தை சங்கராந்தியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சங்கராந்திக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற மெகா படங்கள் திரைக்கு வருகின்றன.
அதனால் கடுமையான போட்டி நிலவும் சங்கராந்திக்கு மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தை வெளியிட வேண்டாம் என்று அப்படத்தை தயாரித்து வரும் மைத்ரிமூவி மேக்கர்ஸ் முடிவெடுத்துள்ளது.அதோடு மாற்றுத்தேதியாக, 2022 ஏப்ரல் 1-ந்தேதி அப்படத்தை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது. மகேஷ்பாபு வங்கி அதிகாரியாக நடிக்கும் இப்படம் நிதித்துறையின் பின்னணி கொண்ட கதையில் உருவாகிறது.