
இன்று இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி
14.03.2021 08:55:28
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
நோர்த் சவுண்டில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரடிப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் வெற்றுப்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 இற்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் ஆறுதல் வெற்றி பெரும் நோக்கில் இலங்கை அணி இன்றைய தினம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.