”பொருட்களின் விலைகள் நாளாந்தம் அறிவிக்கப்படும்”

24.03.2024 09:53:19

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி குறித்த அதிகரித்துவரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தை நோக்கில் புதிய உத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சியம்பலாபிட்டிய, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) இனி நாளாந்த அடிப்படையில் வெளியிடப்படும் என அறிவித்தார். 

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நிறைவேற்றப்படும். 

பணவீக்க அழுத்தங்களுக்கு மத்தியில் நுகர்வோருக்கு நிகழ்நேரத் தகவல் மற்றும் அவர்களின் செலவினங்களில் சிறந்த கட்டுப்பாட்டை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் இடையூறு ஏற்படக்கூடிய சாத்தியமான தட்டுப்பாடுகளைத் தவிர்த்து, சரக்குகள் தடையின்றி செல்வதற்கு உத்தரவாதம் அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தினார்.