
மும்பையில் கனமழை பாடசாலைகள் மூடல்.
மும்பை மற்றும் அதன் அருகிலுள்ள கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, நகராட்சி அல்லது தனியார் என அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக, மும்பை நகரம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வுத் நிலையத்தின் (IMD) பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC) மும்பை பெருநகரப் பகுதியை (MMR) சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைத்துள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், மும்பை பெருநகரப் பகுதியின் பல இடங்களில் 350 மிமீக்கும் அதிகமான மழை பெய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில், மும்பை பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விழிப்புடன் உள்ளன.
வீதிப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்திருந்தாலும், புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.