செம்மணி செல்லும் மனித உரிமை ஆணைக்குழு

02.08.2025 09:36:43

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) யாழ். செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்குப் தீர்மானித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.