கார்த்தி படத்தின் பூஜை வீடியோ ரிலீஸ்!
11.03.2024 07:00:00
ஜப்பான் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங்கை பாதி முடித்த கார்த்தி, இடையில் பிரேம் குமார் இயக்கும் ‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க சென்றார்.
இப்போது அந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் மீண்டும் நலன் படத்தில் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் கார்த்தி இடையிடையே எம் ஜி ஆராக மாறிவிடுவார் என்றும் ஒருவிதமான பேண்டசி தன்மையோடு இந்த கதை உருவாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.