நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் – சபாநாயகர்
06.12.2021 09:56:34
“நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நிலையியல் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள்.”
– இவ்வாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சபைக்குள்ளும், வெளியேயும் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் உறுதியளித்தார்